மகள் எனும் அற்புதம்!

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
international-daughers-day
international-daughers-day

ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா,” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

மிகப்பெரிய தவம் செய்தால் தான் பெண் மகவாய் பிறக்க முடியும். இந்திய வரலாறானது பெண்கள் போற்றப்பட்டதையும், அதே சமயத்தில் இழிவுப் படுத்தப்பட்டையும் தன்னுள் கொண்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னரும் பெண் மழலையை வரவேற்பதிலும் அதே நிலமையை எதிர்க்கொள்ள வேண்டியதாய் இருந்தது. இந்தக் காட்சிகளை மாற்ற, மத்தியில் இருந்த அரசும், பல மாநில அரசுகளும் பலவித முயற்சிகளை எடுத்தும் வந்தன.

வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் என தெரிந்தால் கருவைக் கலைப்பதும், பெண்சிசுக் கொலைகளும் தொடர் கதையாய் தொடர்ந்தது. தன்னார்வத் தொண்டர்கள், பல அரசு சாரா அமைபுகளின் முயற்சியால், அரசுகளுடன் சேர்ந்து, கிராமப்புறங்களில், நகரங்களிலும் விழுப்புணர்வு ஏற்றப்பட்டு, தற்போது மகள்களை மகிழ்ச்சியாக இல்லத்திற்கு வரவேற்கும் நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.

ஏழை மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக அரசுகளும் பல்வேறு உதவித் தொகைகளையும், திட்டங்களையும் மகள்களை பெற்ற பெற்றோர்களுக்கு வகுத்துள்ளன.
அத்திட்டங்கள் பயனாளிகளை அடைய சம்மந்தப்பட்ட துறையில் பணிபுரிவர்களுக்கும், படித்த மக்களுக்கும் பெரும் பங்குள்ளன.

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த வந்தோம்,” என்ற பாரதியின் கூற்றை
தற்போதைய நவீன யுகத்தில் மகள்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு பல்வேறு திறமைகளை தமக்குப் பிடித்த துறைகளில் மிளிர்கின்றனர்.

தற்போதைய வாழ்வியல் முறையினால் மகள்களுக்கு ஏற்படும் மனச்சோர்விற்கும், உடல் உபாதைகளுக்கும் சரியான ஆலோசனைகள் தருவதற்கு, குறிப்பாக, அம்மாக்களுக்கு பெரிதும் பங்கு உள்ளது என்பது மறுக்க முடியாது. அதற்காக, அவர்களும் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு சிறந்த தோழமையுடன் மகள்களுடன் பேசும் கலையை வளர்த்து, மகள்களுக்கு ‘ அம்மா’ என்னும் சிறந்த தோழியை அறிமுகப்படுத்தியும், அதை நிலைநாட்டவும், அம்மாக்கள் தங்களையே பக்குவப்படுத்த வேண்டும்.

மகள் என்பவள் ஓர் அற்புதம்.
‘மகள் – இல்லத்தின் குலவிளக்கு’
‘மகள்- இல்லத்தின் குதூகலம்,
மகள் – இல்லத்தின் மகிழ்ச்சி’,
மகள் – இல்லத்தின் நட்சத்திரம்’,
மகள் – இல்லத்தின் உயிர் நாடி’.

பெண்களின் உணர்வுகளை மதிக்க தெரிந்த மகன்களை தயார்படுத்தவும், ஆண்களின் அலட்சியப் பார்வை தன் மேல் விழாதவாறு மகள்களை வளர்த்தும், மகன்- மகள் வேறுபாடற்ற, சுமூக சமுதாயம் ஏற்படுத்தும் கடமை நம்மிடம் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.