
ஹனுமான் எங்கு பிறந்தார்? திருப்பதி ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலை தான் ஆஞ்சநேயரின் பிறந்த இடமா? அறிந்துகொள்வதற்கு அறிஞர்களின் கமிட்டி ஏற்பாடு செய்த டிடிடி.
திருமலையில் உள்ள ஏழு மலைகளில்தான் அஞ்சனீ புதல்வனான ஆஞ்சநேயர் பிறந்தார் என்று சில நாட்களாக சமூக வலைதளங்களில் கருத்துகள் சுற்றிவருகின்றன.
இந்த பின்னணியில் ஆஞ்சநேயர் உண்மையில் எங்கு பிறந்தார் என்று தெரிந்து கொள்வதற்கு புராணங்களையும் பிற நூல்களையும் பரிசோதிக்க சோதிக்க வேண்டும் என்று இதற்கு முன்பாகவே திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இப்போது அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈஓ ஜவஹர் ரெட்டி இதுகுறித்து அறிஞர்களோடு கூட்டம் ஏற்பாடு செய்தார்.
ஆஞ்சநேய ஸ்வாமியின் ஜென்மஸ்தலம் திருமலை ஏழு மலைகள்தான் என்று புராணங்கள் கூறுகின்றன என்று அந்த கூட்டத்தில் பங்குபெற்ற அறிஞர்கள் ஈஓவின் பார்வைக்கு எடுத்து வந்தார்கள்.
இது தொடர்பாக அவர் பேசுகையில் சில கோவில்களின் தல புராணங்களின் ஆதாரமாக வெவ்வேறு இடங்களை அனுமானின் பிறந்த இடங்களாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறினார்.
இந்தப் பின்னணியில் புராண, வரலாற்று, கலாச்சார, பழக்கவழக்கங்களின் கண்ணோட்டத்தில் ஆஞ்சநேய சுவாமி ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார் என்று பரிசோதனை செய்து நிரூபிப்பதற்கு அறிஞர்கள் கொண்ட ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தார்.
நவீன காலத்தில் ஸ்ரீவாரி பக்தர்கள் அனைவருக்கும் அஞ்சனாத்ரி மலை மீது மேலும் பக்தி விசுவாசம் ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அஞ்சனி புத்திரனான ஆஞ்சநேயரின் ஜென்மஸ்தலம் திருமலை என்று நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் அறிஞர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
ஸ்காந்த புராணம், வராக புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், பவிஷ்யோத்தர புராணம் முதலிய புராணங்களில் இருக்கும் சுலோகங்களை பண்டிதர்கள் அந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார்கள். விரைவில் இது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஈஓ தெரிவித்தார்.