அக்.1: தமிழகத்தில் இன்று… 5688 பேருக்கு கொரோனா உறுதி; 66 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-image
corona-image

தமிழகத்தில் இன்று 5688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. 6,03,290 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 

சென்னையில் ஒரே நாளில் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் இதுவரையிலான பாதிப்பு 1,68,689 என அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5,516 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு களுக்கு திரும்பியோர் எண்ணிக்கை 5,47,335  ஆக உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் இன்று 66 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது  இதையடுத்து  வைரஸ் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தோர் எண்ணிக்கை 9,586  ஆக அதிகரித்துள்ளது 

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 46,369 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

district-wise-corona-details-oct-01
district-wise-corona-details-oct-01

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.