
சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் மகனையும் பேத்தியையும் மருமகனையும் இழந்த முதிய பெண்மணி. மனம் வருந்திய கவர்னர் 50 ஆயிரம் ரூபாய் பண உதவி.
பாம்பு கடித்து மற்றும் பிற அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் தேவையான சந்தர்ப்பங்களில் துரதிருஷ்டவசமான மரணங்களை தடுப்பதற்கு கிராமிய முதலுதவி சிகிச்சை மையங்கள் (பிஹெச்சி) தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் ஆன்டிவெனம் இன்ஜெக்ஷன், மெடிக்கல் கிட் இவற்றோடு கூட பயிற்சி பெற்ற ஊழியர்கள் கைவசம் இருக்க வேண்டும் என்று தெலங்காணா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏழைகள், பொருளாதார மற்றும் சமூகத்தில் பின்தங்கிய வர்க்க மக்களுக்கு கிராமங்களில் அத்தியாவசிய மருத்துவ வசதிகளுக்கு தடை இருக்கக்கூடாது. தேவையான போது அத்தியாவசிய மருத்துவம் பெறுவதற்கு பொருளாதார, சமூக, பின்தங்கிய நிலைமை குறுக்கே வரக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு ஏழை தலித் முதிய பெண்மணியின் அவஸ்தையை அறிந்து கொண்டு மனம் வருந்திய கவர்னர் அவரை புதன்கிழமை ராஜ்பவனுக்கு வரவேற்று மதிய உணவு அளித்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கு போதுமான நித்யாவசிய சாமான்களோடு ரூ.50,000 பொருளுதவியும் செய்தார்.
ஜனகாம் மாவட்டம் பாலக்குர்த்தி மண்டலம் லக்ஷ்மி நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பண்டிபெல்லி ராஜம்மா (75) இருக்க இடமில்லாமல் சாலைகளில் மரங்களின் கீழ் வசித்து வருகிறார்.
சரியான நேரத்தில் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் ஆரோக்கியமின்றி அவருடைய மகனும் பாம்பு கடித்ததால் பேத்தியும் இறந்துபோனார்கள். பேத்திக்கு சரியான நேரத்தில் பாம்பு கடி மருந்து கொடுக்க வேண்டிய இன்ஜக்ஷன் கொடுக்காததால் அவர் மரணித்தார். உடல் நலமின்றி ராஜம்மாவின் மருமகன் கூட சரியான மருத்துவ வசதி இல்லாமல் மரணித்தார்.
இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு கவர்னர் மிகவும் வருந்தினார். மிகவும் ஏழையான முதிய பெண்மணி, அவர் மேல் ஆதாரப்பட்ட உடல் ஊனமுற்ற மகன் ஆகியோரின் நலனை கவனிக்க வேண்டுமென்று ஜனகாம் மாவட்டம் அதிகாரிகளோடு கூட உள்ளூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பிரதிநிதிகளையும் கவர்னர் உத்தரவிட்டார்.
கவர்னர் அழைப்பின் பேரில் ராஜ்பவனில் விருந்து உண்டேன் என்று ராஜம்மா மகிழ்ச்சியோடு கண்ணீர் விட்டார்.
ராஜம்மாவுக்காக வீடு கட்டித் தருவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நன்கொடை சேகரிப்பதோடு கூட தன் சொந்த உதவியாக ரூ80,000 நிதிஉதவி அளித்த பாலகுர்த்தி எஸ்ஐ கண்ட்ரதி சதீஷ் செய்த உதவியை கவர்னர் பாராட்டினார்.
ராஜம்மாவுக்குத் துணையாக நின்ற அந்த கிராம முன்னாள் சர்பஞ்ச் மணியம்மாவுக்கு கவர்னர் சன்மானம் செய்தார். டாக்டர் பி கிருஷ்ணா, தன்னார்வத் தொண்டர் மஹிந்தர் ஆகியோரின் முயற்சியை கவர்னர் பாராட்டினார். அவர்களிருவரும் முதிய பெண்மணிக்குத் துணையாக ராஜ்பவனுக்கு வந்திருந்தார்கள்.
முதிய பெண்மணிக்கு பொருளாதார உதவி அளித்த எஸ்ஐக்கு அந்த பணத்தை கவர்னர் தமிழிசை திரும்ப அளித்தது சிறப்பான விஷயம்.