
விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிகிறது. ஜகத் ஜனனி கனகதுர்க்கை அம்மனின் தீட்சையில் இருக்கும் ‘பவானிகள்’ அம்மனை தரிசித்து கொண்டு தீட்சையை முடித்துக் கொள்வதற்காக திரண்டு வந்தார்கள். நேற்றிலிருந்து ஐந்து நாட்கள் பவானி தீட்சையை நிறைவு செய்வதற்காக துர்காமல்லேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
மகா மண்டபம் எதிரில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் காலை 6:50 மணிக்கு கோவில் மண்டபத்தில் கோவில் கமிட்டியின் தலைமையில் புரோகிதர்கள் அக்னி பிரதிஷ்டை செய்ததோடு பவானி தீட்சை நிறைவு மகோத்ஸவங்கள் தொடங்கின. அக்னி குண்டங்களோடு கூட இருமுடி சமர்ப்பிப்பதற்கு இருபது கௌண்டர்களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஆலய பாலகமண்டலி சேர்மன் பைலா சோமிநாயுடு, ஈஓ சுரேஷ்பாபு, கோவில் ஸ்தானாச்சாரியார் சிவப்பிரசாத சர்மா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள்.
விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மன் சன்னதி வரை க்யூவரிசையில் பக்தர்கள் செவ்வாடை அணிந்து தலை மீது இருமுடி சுமந்து “ஜெய் பவானி!” நாம உச்சாரணத்தோடு துர்கா தேவியை தரிசித்து கொள்வதற்கு வரிசையாக நின்று இருந்தார்கள்.

தினமும் காலையில் நான்கு மணியிலிருந்து இரவு 8 மணி வரை தீட்சையை நிறைவு செய்வதற்காக வரும் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். தினமும் 10 ஆயிரம் பேர் பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு அளிக்கிறார்கள். ஆன்லைனில் டிக்கெட்டை முன்பாகவே புக் செய்து கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
கோவிட் நிபந்தனைகளை கணக்கில் கொண்டு கிரி பிரதட்சிணம், ஸ்நான கட்டங்களில் ஸ்நானங்கள் ஆகியவற்றை தடை செய்துள்ளார்கள். கோவில் சுற்றுப்புறத்தில் முடி இறக்கும் வாய்ப்பு கிடையாது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது தாண்டிய முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தரிசனம் தடை விதித்துள்ளார்.

க்யூ வரிசைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சமுதாய இடைவெளியை கடைபிடிப்பதோடு கூட மாஸ்க் அணிய வேண்டும் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.
தரிசனத்திற்குப் பின் மலையின் கீழ் மகா மண்டபம் அருகில் இருமுடி, ஹோம குண்டங்களின் ஏற்பாடு உள்ளது. தீட்சை முடிக்கும் சந்தர்ப்பமாக போலீசார் கட்டுதிட்டமான பந்தோபஸ்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.
பவானி தீட்சை மகோத்ஸவங்களில் சுமார் 2 லட்சம் பேர் பவானி அம்மனை தரிசித்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளார்கள்.