ஆந்திராவில் நாளை கைதட்டி ஆரவாரம்.

Published:

ஆந்திராவில் நாளை மாலை 7 மணிக்கு அனைவரும் கை தட்ட வேண்டும்… அமைச்சர். வேண்டுகோள்.

வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கை தட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்

ஆந்திரப் பிரதேசத்தில் கிராமச் செயலகம் அமைப்பு தொடங்கி வெள்ளிக்கிழமை ஓராண்டு நிறைவடைகிறது.

அரசாங்கதின் செயல்திட்டத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கிராமச் செயலகம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என்று அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி குறிப்பிட்டார்.

அநீதிக்கு இடம் கொடுக்காமல் 543 சேவைகளை கிராமச் செயலகம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சென்றுள்ளோம் என்றார்.

அநீதியற்ற ஆட்சி முறையை அரசாங்கம் அளித்து வருகிறது என்றும் கிராமச் செயலகதின் வேலைத்திறன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார் என்றும் கூறினார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

மத்திய கேபினட் செக்ரெட்டரி கூட பிரத்தியேகமாக நம் செயலக அமைப்பினை பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

யுபிஎஸ்சி ட்ரெய்னிங் சென்டரில் ஒரு பாடமாக ஆந்திராவின் செயலக அமைப்பினை சேர்த்துள்ளார்கள் என்று பெத்திரெட்டி தெரிவித்தார். 1,26,200 பேர் இதுவரை கிராம செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் 4 லட்சத்துக்கும் மேல் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த பெருமை தமக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமச் செயலகப் பணிகளை பாராட்டும் விதமாக வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கைதட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கோரினார். மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

61 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பென்ஷன்கள் சென்ற மாதம் வரை அளித்துள்ளோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 34,907 பேருக்கு சென்ற மாதம் புதிதாக பென்ஷன் அளித்து பட்டியலில் சேர்த்தோம் என்றார்.

கடந்த அரசாங்கத்தை போல் அல்லாமல் தம்முடைய அரசாங்கம் இந்த பென்சன் அளிக்கும் செயலை நிரந்தரம் தொடரும் என்று கூறினார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Screenshot 2020 10 01 20 51 19 796 com.android.chrome - 2026

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img