அக்.2: தமிழகத்தில் இன்று .. 5595 பேருக்கு கொரோனா தொற்று; 67 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-image
corona-image

தமிழகத்தில் மேலும் 5,595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரேநாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர் .

தமிழகத்தில் மேலும் 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,08,885  ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரே நாளில் 1778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 170025  ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக ஒரே நாளில்  67 பேர் உயிரிழந்துள்ளனர் இவர்களில் 24 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதை அடுத்து கொரோனாவுக்கு மொத்த உயிரிழப்பு 9,653 என அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5,603 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து  வைரஸிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியோர்   எண்ணிக்கை 5,52,938  ஆக அதிகரித்துள்ளது 

தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

districtwise-corona-status-oct-02
districtwise-corona-status-oct-02

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.