கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 1,800 கன அடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
கே.ஆர்.பி. அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் நீர் திறப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.




