பேராவூரணியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
peravoorani-kalam-birthday
peravoorani-kalam-birthday

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் ,பேராவூரணி தேவதாஸ் ரோடு, டாக்டர் காந்தி மருத்துவமனை அருகில் கே .டி. எம். குழுவினர் சார்பில் டாக்டர் அப்துல் கலாமின் 89 -வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு குழுவின் தலைவர் ஜே .கே. விவேக் தலைமை வகித்தார். செயலாளர் கே. ஹரிஹரன், பொருளாளர் ஜி. சங்கீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ஐ.செந்தூரப்பாண்டியன் கலந்துகொண்டு டாக்டர் அப்துல் கலாமின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி டாக்டர் அப்துல் கலாம் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் பற்றி விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், எஸ். குமார், தீயணைப்பு வீரர்கள் கு.விஜய் , க.சரவணமூர்த்தி மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், மரக்கன்றுகள், முககவசம் வழங்கப்பட்டன.

  • செய்தி: ரவிச்சந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.