அம்மா கிளினிக் திறப்பு விழாவில்… கட்டடம் இடிந்த சம்பவம்: மன்னிப்பு கேட்ட அமைச்சர்!

Published:

IMG-20210131-WA0032
IMG-20210131-WA0032

அம்மா கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டிடம் இடிந்த சம்பவம் மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

கரூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டடத்தின் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.

IMG-20210131-WA0037
IMG-20210131-WA0037

கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா மினி கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அங்கு புதிய கட்டடம் இல்லாததால் அங்கிருந்த சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக
அம்மா கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு இன்று மாலை அம்மா கிளினிக் திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்து அமைச்சர் வெளியே வரும் முன்பே, கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு தரையின் கை பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது.


இதில், அருகில் நின்றிருந்த குழந்தைகள் உட்பட இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு இருந்த மக்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related articles

Recent articles

spot_img