ஆரோக்கிய சமையல்: வரகு பெசரட்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
varaku-pesarat-1
varaku-pesarat-1

வரகு பெசரெட்
தேவையான பொருட்கள்
சிறுபயறு – 100 கிராம்
வரகு – 50 கிராம்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
அலங்கரிக்க :
வதக்கிய பெரிய வெங்காயம்
கொத்தமல்லித் தழை
உள்ளே வைக்க :
ரவா உப்புமா
செய்முறை:
பயறு, வரகு இரண்டையும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து வதக்கிய வெங்காயம், மல்லித் தழை தூவவும். வெந்ததும் நடுவில் ரவா உப்புமா வைத்து மடிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.