நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்கந்த மாதாவுக்கு விருப்பமான நைவேத்யம் என்ன?

ஆன்மிகக் கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
skandamata
skandamata

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி  ரகுநாதன்

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில் – 9

கேள்வி: ஸ்கந்த மாதாவாக தரிசனம் அளிக்கும் லலிதா திரிபுரசுந்தரிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? புஷ்பங்கள் என்ன?

பதில்: ஐந்தாம் நாள் பஞ்சமி. ‘பஞ்சமி பஞ்சபூத தேசி..’ என்கிறோம். பஞ்சமி லலிதா வரிசைக்கிரமத்தில் பார்க்கும்போது வாராஹி தேவிக்கு மிகப் பிரீதியான நாள்.

அதனால் வடை நிவேதனம் கூறப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமிக்கு பிடித்தது கூட பாயசமும் வடையும். அதையும் கவனத்தில் கொண்டு பாயசம், வடை நைவேத்தியம் செய்வது இன்றைய சிறப்பு.

சாத்வீகமான புஷ்பங்கள் எது கிடைத்தாலும் இன்றைய வழிபாட்டுக்கு உகந்தவையே. ஸ்கந்தமாதா சொரூபம் வெண்மையான ஒளி பொருந்தியதாக வர்ணிக்கப்படுவதால் வெண்ணிற புஷ்பங்கள் சிறப்பு. அதற்காக பிற புஷ்பங்களால் பூஜிக்கக் கூடாது என்று அல்ல. அவற்றையும் உபயோகிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.