30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்!

இந்தியா லைஃப் ஸ்டைல்
prakash javadekar
prakash javadekar

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கெசட்டட் அந்தஸ்து இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2019-20 ஆம் நிதியாண்டிற்கு உற்பத்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சாராத போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால், மத்திய அரசுக்கு ரூ.3737 கோடி செலவு ஏற்படும் என்றும், நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதனால் பலனடைவர் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயதசமிக்கு முன்னர் போனஸ் தொகை வழங்கப்படும் என்றும் பிரகாஷ் ஜாவ்டேகர் அப்போது தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.