கொரோனா: தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கு குறைந்த பாதிப்பு!

Published:

corona-image-1
corona-image-1

தமிழகத்தில் இன்று 3086 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து பத்தாவது நாளாக  கொரோனா பெருந்தொற்று பாதிப்பு  குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்தில் இன்று 3086 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இதனால் தமிழகத்தில் இதுவரையிலான ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,97,116ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,527ஆக உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,780 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 4,301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் இதனால், தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,50,856  ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img