கதாநாயகியாக களம் இறங்கும் அனிகா – இனிமேல் ஹீரோயின் மட்டும்தானாம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். மேலும், விஸ்வாசம் படத்திலும் அஜித் மகளாக நடித்தார்.

சிறுமியாகவும் இல்லாமல், பருவ பெண்ணாகவும் இல்லாமல் இருக்கும் அவர் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதைக்கண்ட ரசிகர்கள் ‘இந்த வயதில் உனக்கு எதுக்குமா இதலாம்.. உன்னை சிறுமியாகவே பார்க்கிறோம்’ என பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், அனிகாவின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பெல்லா’ படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் அனிகாவிற்கு ஹீரோயின் வேடம் கிடைத்துள்ளது. மேலும் இனிமேல் மகள் வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோயின் மட்டும்தான் என சபதம் எடுத்துள்ளாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.