2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை

இந்தியா சற்றுமுன்

2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்து, தில்லி சிபிஐ சிறப்​பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆவணங்களை சிபிஐ தரப்பு தாக்கல் செய்யப்படாததால், அனைவரும் விடுதலை என்று நீதிபதி ஓ.பி.ஷைனி கூறினார்.

6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப் பட்டது. தமிழகம் முழுவதும் திமுகவினர் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைஞர் தொலைக்காட்சி வழக்கில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர். இது குறித்துக் கூறிய நீதிபதி ஓ.பி.ஷைனி, ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறினார்.

2ஜி முறைகேடு தொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றது

தொடர்பான வழக்கிலும், ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம், சரத்ரெட்டி ஆகியோர் விடுதலை என நீதிபதி அறிவித்தார்.

இதனிடையே, 2ஜி வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக.,வினர் மட்டுமல்ல,, கூட்டணிக் கட்சியினர், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கூறினர்.

திமுக மீது கடந்த 10 ஆண்டாக சுமத்தப்பட்ட கரை நீக்கியது என்று கூறியுள்ளார் துரை.முருகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.