அறநிலையத்துறை கோயில் இணை ஆணையர்கள் 10 பேர் இடமாற்றம்!

Published:

hrnce office - 2026

இந்து சமய அறநிலையத்துறையில் 10 கோயில் இணை ஆணையர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணிபுரியும் பாரதி மாற்றப்பட்டு, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்..

திருச்செந்துார் கோயிலுக்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் குமரதுரை, மாற்றப்படுகிறார்..

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வேலுார் இணை ஆணையர் அசோக்குமார் மாற்றப்படுகிறார்..

வேலுார் இணை ஆணையராக, சென்னை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் தனபால் நியமிக்கப்படுகிறார்..

சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு திருவேற்காடு கோயிலில் பணிபுரியும் வான்மதி மாற்றப்படுகிறார்..

திருச்சி இணை ஆணையராக, சென்னை ஆணையர் அலுவலகத்தின் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களின் இணை ஆணையராக பணிபுரியும் சுதர்சன் மாற்றப் படுகிறார்..

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பணிபுரியும் மங்கையற்கரசி மாற்றப்பட்டு, சென்னை ஆணையர் அலுவலத்தின் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களின்
இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்..

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம் கோயிலுக்கு திருச்சி இணை ஆணை யராக பணிபுரியும் கல்யாணி மாற்றப்படுகிறார்..

தலைமையிடத்துக்கு சென்னை இணை ஆணையர் லட்சுமணன் மாற்றப்பட்டு, அவருடைய இடத்துக்கு ஹரிப்பிரியா நியமிக்கப்படுகிறார்..

இவ்வாறு உத்தரவில் செயலர் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img