இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள காவல்துறையில் ரோபோ

Published:

IMG 20190222 134716 - 2026திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக மனித வடிவிலான ரோபோ நிறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராய் விஜயன் இதனை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

IMG 20190222 134634 - 2026இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது.காவல்துறை பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரோபோ அறிமுகப்பட்டுள்ளதாக டிஜிபி லோகநாத் பெஹ்ரா விளக்கினார்.

IMG 20190222 134739 - 2026நான்கு பேர் செய்யக் கூடிய வரவேற்பறை பணியை இந்த ரோபோ சமாளிக்கும். புகார்கள் அடிப்படையில் வழக்கு தொடர்பான கோப்புகளைத் தயாரித்தல், விருந்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இந்த ரோபோ செய்து முடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img