முதலிரவில் மணப்பெண்ணுக்கு நடந்த அநியாயம்! அதிர்ச்சியளித்த மணமகனின் செயல்!

இந்தியா சற்றுமுன்
marriage-fn-1
marriage-fn-1

மணமகன் திருமண அலங்காரத்துடன் முதலிரவு அறையில், கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்க்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், மணமகன் திருமண அலங்காரத்துடன் முதலிரவு அறையில், கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், மணமகன் ஒருவர் போட்டோகிராபரை அடிப்பதும், அதற்கு மணமகள் காட்டிய ஸ்வீட் ரியாக்ஷனும் டிரெண்டிங் ஆகி வைரலானது. கடந்த சில நாட்களுக்கு முன், இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய, சென்னை டெஸ்ட் போட்டியின் லைவ் ஸ்ட்ரீம் ஒன்று, திருமண நிகழ்வில் ஒளிபரப்பாக அதுவும் வைரலாகி இருந்தது. இந்நிலையில், முதலிரவுக்கு முன் மணமகன் கம்யூட்டர் முன் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், மணமகன் தனது திருமண (Wedding) அலங்காரத்துடன், கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால், முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்காரத்துடன் கூடிய கட்டிலில், மணமகள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நெட்டிசன்களின் விழிகளை விரிய வைத்திருக்கும் அந்த புகைப்படம், ‘கொஞ்சம் பொறுத்திரு பேபி’ (Hold on babe) என்ற தலைப்பில் மீம் கண்டென்டாக மாறி உள்ளது. பலரும் இந்த புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி, அதனை பதிவேற்ற அதுவும் வைரலாகி கொண்டிருக்கிறது.

கொஞ்சம் பொறு பேபி.. சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்துவிட்டு வந்துவிடுகிறேன்.. டுவிட்டர் நோட்டிபிகேஷன் பார்த்துவிட்டு வருகிறேன்.. நெட்டிசன்கள் அதனை மீம்களாக பதிவேற்றி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.