இரவில் நடந்து சென்ற மூதாட்டி! பாலியல் பலாத்காரம் செய்து கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரம்!

Published:

vankodumai
vankodumai

அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து 70 மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர் காலடி பேட்டை மார்க்கெட் லேன் பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் இரவு 10 மணி அளவில் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் மூத்தாட்டியிடம் பேச்சு கொடுத்து கொண்டே ஏமாற்றி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு போதிய மின்விளக்கு வசதிகள் இல்லை. பழைய வாக னங்களும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ள நிலையில் அதனை சாதமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர் பாட்டியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் மூதாட்டியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் முகம் சிதைந்த நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இரவு 10.50 மணி அளவில் செல்லும் அவர் இரவு 11.40 மணி அளவில் அங்கிருந்து வெளியில் தப்பி ஓடுவது அதில் பதிவாகியுள்ளது. இரவு நேரம் என்பதாலும் மின்விளக்குகள் இல்லாததாலும் மர்ம நபரின் முகம் சரியாக தெரியவில்லை என்பதால் தேடுதலில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

பராமரிக்கப்படாத அரசு மருத்துவனைக்குள் ஒரு மூத்தாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img