கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு! பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

கடையநல்லூர்: நெல்லை மாவட்டத்தில்  டெங்குக் காய்ச்சல் பரவலை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கடையநல்லுர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அதிகாரிகளிடம்  டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆய்வை மேற்கொன்டார்.

அப்போது பேட்டை பகுதி 28, 29 ,30 ஆகிய வார்டுகளில் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் அறிகுறி அதிகளவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றது அந்த பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கொசு புளுக்கள் உற்பத்தி ஆகுககிறதா என்பதை கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அதன் பின்னர் பொதுமக்களிடம் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்ககளும் வீடுகளை ஆய்வு செய்ய நகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பொது மக்ககள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்றார்.

ஆய்வின் போது தென்காசி கோட்டாச்சியர் ராஜேந்திரன் நகராட்சிமண்டல இயக்குநர் ரானஜ்,தாசில்தார் மாரியப்பன் ,நகராட்சி ஆனையர் அய்யூப்கான் பொறியாளர் கிறிஸ்டோபர், நகரமைப்பு ஆய்வாளர் சேக்மைதீன் , பூச்சியல் துறை  வல்லுனர் ராமலிங்கம் , கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் ராஜ்குமார், ,, நகர்புற அலுவலர் டாக்டர் ரவி சுகாதார ஆய்வாளர்கள் சேகர், சக்திவேல், ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி படம்: குறிச்சி சுலைமான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.