இந்திய அளவில் சிறந்த ஸ்டேஷனாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு

உள்ளூர் செய்திகள் கோவை

கோயமுத்தூர்:

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தை தேர்வு செய்துள்ளனர்.

கான்பூரில் காவல்துறை தலைவர்கள் மகாநாட்டில் நாட்டின் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் முன்று இடங்களில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா, உ.பி.யில் உள்ள குட்டம்பா, தமிழகத்தின் கோவை ஆர்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்கள் இடம் பெற்றன. கான்பூரில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். இதனை ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஜோதி பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.