தந்தையின் கையாலே மரணத்தை தழுவிய 2 வயது சிறுமி!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Tractor
Tractor

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாமகவுண்டனூர் பகுதியைச் சார்ந்த விவசாயி வேலாயுதம். இவர் தன்னுடைய டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். வேலாயுதம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிராக்டரை பின்புறம் நகர்த்தும் போது பின்னால் நின்று கொண்டிருந்த 2 வயது மகள் தேர்மிகா டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயும் தந்தையும் கதறி அழுத சம்பவம் நெஞ்சை பதறவைத்தது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.