November 11, 2024, 3:15 AM
27.5 C
Chennai

23 வயது பிறந்தநாளைக் கொண்டாடிய கூகுள்!

google
google

உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல சர்ச் என்ஜினான கூகுள், நேற்று (செப்டம்பர் 27) தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடியது .

இதனையொட்டி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஹோம் பேஜில் ஒரு சிறப்பு டூடுலை வைத்து இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் உலக தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய பண்டிகைகள், பிரபலங்கள் அல்லது விளையாட்டு வீரர்களின் சாதனைகள் உள்ளிட்ட பலவற்றை உலக மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் கூகுள் தனது சர்ச் எஞ்சினின் ஹோம் பேஜில் சிறப்பு டூடுலாக வைப்பது வழக்கம்.

அந்த டூடுலை கிளிக் செய்தால் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அது தொடர்பான செய்திகளை யூஸர்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று 23-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள், தனக்கான சிறப்பு டூடுலை தன் ஹோம் பேஜில் கொண்டுள்ளது.

இந்த பிறந்தநாள் ஸ்பெஷல் டூடுலில் Google என்ற ஆங்கில ஸ்பெல்லிங்கில், L என்ற எழுத்திற்கு பதிலாக எரியும் மெழுகுவர்த்தியுடன் கூடிய பிறந்தநாள் கேக் காணப்படுகிறது.

உண்மையில் கூகுள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த பிஎச்டி மாணவர்களான, லேரி பேஜ் (Larry Page) மற்றும் செர்ஜி பிரின் (Sergey Brin) ஆகியோரால் நிறுவப்பட்டது.

ALSO READ:  ஜயந்தி விழா: மதுரை பகுதியில் தேவர் சிலைக்கு மரியாதை!

இவர்கள் இருவரும் தங்களது யுனிவர்சிட்டி ப்ராஜெக்ட்டிற்காக ஒரு ஆன்லைன் சர்ச் என்ஜினை உருவாக்க நினைத்தார்கள். லைப்ரரிஇயில் இருக்கும் புக்ஸ் மாறும் டாகுமெண்ட்ஸை தேட உருவாக்கப்பட்ட இந்த சர்ச் என்ஜின் இன்று ஆன்லைன் உலகில் பல கோடி மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல முன்னணி சர்ச் இன்ஜினாக வளர்ந்துள்ளது.

லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்ஆகிய இருவருடனும் இணைந்து கூகுளை முழுமையான சர்ச் என்ஜினாக ப்ரோக்ராம் செய்தவர் ஸ்காட் ஹசன் என்பவர் ஆவார். எனினும் கூகுள் ஒரு நிறுவனமாக துவங்கப்படுவதற்கு முன்பே இந்த ப்ராஜெக்டிலிருந்து ஸ்காட் வெளியேறி ரோபாட்டிக்ஸ் துறைக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கூகுள் நிறுவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கூகுள் அறக்கட்டளை (Google’s foundation) கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1998-ஆம் செப்டம்பர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டது.

இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனம் செப்டம்பர் 4-ம் தேதி துவங்கப்பட்டதால், கூகுள் நிறுவனம் துவக்கப்பட்டு முதல் 7 ஆண்டுகளுக்கு அந்நிறுவனத்தின் பிறந்தநாள் செப்டம்பர் 4-ம் தேதியே கொண்டாடப்பட்டு வந்தது.

ALSO READ:  நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!

இருப்பினும் பிற்பாடு கூகுள் நிறுவனம் தனது பிறந்தநாள் கொண்டாட்டத் தேதியை செப்டம்பர் 27 -க்கு மாற்ற முடிவு செய்தது. ஆல்ஃபாபெட் இன்க்-ன் (Alphabet Inc) முழு சொந்தமான துணை நிறுவனமாக கூகுள் 2015-ல் மறுசீரமைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கூகுள் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல்களை (searches) இயக்கி வருகிறது.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டி20 ஆட்டம் – டர்பன் – 10.11.2024

இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டி20 ஆட்டம் – டர்பன்– 10.11.2024முனைவர்...

டியர் டிரம்ப், அந்த காலிஸ்தானி பயல்களை சிறையில் அடைக்கவும்!

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வந்து 4 நாட்களாகியும் அங்கே கலவரம் வெடிக்கவில்லை. ஏன்??? டிரம்ப்புடன் டீல் போட்டுவிட்டதா டீப் ஸ்டேட்??

இந்திரா செளந்தரராஜன் காலமானார்!

மலர்ந்த முகமும் எப்போதும் அன்பு மயமாகப் பேசும் பேச்சுமாக வாழ்ந்து மறைந்த அவர் நினைவுகள் என்றும் என் மனத்தில் மணம் வீசிக் கொண்டிருக்கும். அவர் தம் எழுத்துகளில் வாழ்வார்.

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறந்த தேசபக்தர் நெல்லை கணேஷ் என்ற ‘டெல்லி கணேஷ்’!

அண்மையில் சதாபிஷேகம் நடந்தது. என்னால் செல்ல முடியவில்லை. செல்போனிலாவது பேசி ஆசி பெறலாம் என நினைத்திருந்தேன்.