உங்களுக்கும் பிடிக்கும் இந்த மங்களூர் கூட்டு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Mangalore-kuttu
Mangalore-kuttu

மங்களூர் கூட்டு
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
தனியாத் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – அரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
கசகசா – கால் மேசைக்கரண்டி
சோம்பு – கால் மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிது
கடுகு, சீரகம் – தலா ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது

செய்முறை
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். தேங்காய் துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்

அதில் தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, உருளை சேர்த்து கொதிக்க விடவும்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு உருளைக்கிழங்கு வெந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

கலவை கெட்டியானதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான மங்களூர் கூட்டு தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.