கருணாநிதி சிலைத் திறப்புக்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் கைது!

சற்றுமுன் மதுரை
bjp-madurai-protest
bjp-madurai-protest

மதுரை சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி சிலையை முற்றுகையிட முயன்ற பாஜக.,வினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலையை மதுரையில் அமைப்பதற்கு அனுமதி தரவேண்டும் என திமுகவினர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை மாநகர் பகுதியில் உள்ள சிம்மக்கல் வஉசி சிலை அருகே கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு நடைபெற்ற வருகிறது.

தற்போது இன்றைய தினம் மு க ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிம்மக்கல் பகுதியில் கருணாநிதியின் சிலையை வைக்கக்கூடாது என பாஜக வினர் சார்பாக நேற்றைய தினம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று மு க ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறக்க உள்ள சூழ்நிலையில் பாஜக மாவட்டத் தலைவர் கே கே சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலையை முற்றுகையிட முயன்றனர்

அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக கைது செய்து அனுப்பி வைத்தனர். இதனால் சினிமாக்கள் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.