
இமயமலைத் தாவரங்களில் பூஞ்சை, வைரஸ்களை எதிர்த்துப் போராடவும், விலங்குகள் நுகர்வதைத் தடுக்கவும் உதவும் தாவரங்களால் தயாரிக்கப்படும் இரசாயன கலவைகள் உள்ளன. இவை பைட்டோ கெமிக்கல்கள் (phytochemicals) என்று அறியப்படுகின்றன.
இந்த வழக்கமான பணியில், இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்திருக்கிறது.
மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பொதுவாகக் கிடைக்கும் தாவரமான ‘ஹிமாலயன் புரான்ஷ்’ (Himalayan Buransh) என்ற பூவின் இதழ்கள் கோவிட்-19 இன் நோயைத் (Covid Disease) தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.
கோவிட்-19 தொற்றிய வெரோ இ6 செல்களில் (vero E6 cells) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டது. பாக்டீரியா மற்றும் வைரஸின் பாதிப்பை ஆய்வு செய்ய பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆப்பிரிக்க குரங்கின் சிறுநீரகத்தில் உள்ள செல்கள் இவை.
கொரோனா வைரஸுக்கு (Corona Virus) எதிரான சிகிச்சையாகவோ அல்லது மருந்தாகவோ இந்த ஆராய்ச்சி பயன்படலாம் என்று ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள், தெரிவித்தனர்.
ஐஐடி மண்டியின் அடிப்படை அறிவியல் பள்ளியின் BioX மையத்தின் இணைப் பேராசிரியரான டாக்டர் ஷியாம் குமார் மசகபல்லி இது பற்றி தகவல்களை கொடுத்தார்.
அரிய மற்றும் அழிந்து வரும், நறுமண மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளிட்ட இமயமலை தாவரங்களைப் புரிந்துகொள்வதற்கான பணிகளை ஐஐடியின் குழு 2019 முதல் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பிட்ட நோய்களை எதிர்த்துப் போராட உதவும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட சேர்மங்களைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு ஹிமாலயன் பைட்டோகெமிக்கல் நூலகத்தை (Himalayan Phytochemical Library) நிறுவுவதே அவர்களின் இறுதி இலக்காக இருந்தது.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் COVID-19 நோய்த்தொற்று (Covid Infection)ஏற்பட்டது. இந்த நோய்க்கு எதிராக தாவரத்திலிருந்து பெறப்பட்ட மருத்துவ குணங்களைக் கண்டறியும் பணியை அவர்கள் துரிதப்படுத்தினர்.
இமயமலை மலர்களின் இதழ்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இருந்தாலும், அவற்றின் பண்புகள் ஆய்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இந்த இலைகளை சாப்பிட்டால் அவை, நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். ஆனால், அதன் இதழ்கள் சுவையூட்டிகளாக செயல்படுகின்றன, கோடை காலத்தில் குளிரூட்டியாக இருக்கும் ஸ்குவாஷாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இதழ்களிலிருந்து பைட்டோ கெமிக்கல்களைப் பிரித்தெடுத்து கணக்கீட்டு மற்றும் உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டன.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இதழ்களிலிருந்து எடுக்கப்படும் சூடான நீரின் சாற்றில் குனிக் அமிலம் மற்றும் அதன் வழித்தோன்றல்கள் நிறைந்துள்ளன.
மூலக்கூறு இயக்கவியல் ஆய்வுகள் இந்த பைட்டோ கெமிக்கல்கள் வைரஸுக்கு எதிராக இரண்டு வகையான விளைவுகளைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இது வைரஸ் நகலெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நொதியாகும்.
சோதனை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விளக்கிய டாக்டர் ஷியாம் குமார், குரங்கு கல்லீரலில் இருந்து பெறப்பட்ட செல்களில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படுத்தபப்ட்டது. அதில், சில செல்கள் இறந்துவிட்டதாகவும், வைரஸ்கள் பல்கிப் பெருகியதும் கண்டறியப்பட்டது.
ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளபபட்ட மலரில் இருந்து பெறப்பட்ட கலவையை (வெவ்வேறு அளவுகளில்) சேர்த்தவுடன், வைரஸ் குறைந்து, அதன் தாக்கம் 80 சதவீதம் வரை தடுக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆராய்ச்சி தொடர்பாக, புது தில்லியில் உள்ள மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தின் வெக்டார் போர்ன் டிசீஸ் குரூப் டாக்டர் சுஜாதா சுனில் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
“பைட்டோ கெமிக்கல் விவரக்குறிப்பு, கணினி உருவகப்படுத்துதல் மற்றும் இன் விட்ரோ வைரஸ் தடுப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றின் கலவையானது புரான்ஷ் இதழ்களின் சாறுகள் பிரதிபலிப்பைத் தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது. கோவிட்-19 வைரஸின் டோஸ் சார்ந்த முறையில் இதை பயன்படுத்தலாம் என்ற ஊக்கத்தை இது கொடுக்கிறது.”
இருப்பினும், கோவிட்-19க்கு எதிரான சிகிச்சையை (மாத்திரை அல்லது ஸ்ப்ரே வடிவில்) இந்தக் கலவையிலிருந்து பெற முடியுமா என்பது தெளிவாக நிரூபிக்கப்படுவதற்கு மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும்.
இந்த செயல்முறையானது மேலதிக ஆய்வுகள், பரிசோதனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.