
நான் நல்ல நடிகன் அல்ல போலிருக்கு. அதனால்தான் சிரஞ்சீவி என்னை அழைக்கவில்லை – பிரதாப் போத்தன்.
அண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இல்லத்தில் ‘கிளாஸ் ஆஃப் எய்ட்டீஸ்’ என்ற பெயரில் 80 களில் கொடி கட்டிப் பறந்த அன்றைய நட்சத்திரங்கள் அனைவரும் சேர்ந்து மிகப் பெரிய அளவில் ஆண்டு நிறைவு பார்ட்டி கொண்டாடினார்கள்.
சுமார் 50 ஸ்டார் நடிக, நடிகையர் ‘சிரஞ்சீவி’ வீட்டில் ஏற்பாடு செய்த கெட் டுகெதரில் சந்தித்து அப்போதைய நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த கெட் டூ கெதர் நிகழ்ச்சிக்கு, தன்னை அழைக்காததற்காக ரொம்பவே ஃபீல் பண்ணி வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் பிரதாப் போத்தன்.
தெலுங்கில் ஆகலி ராஜ்யம், காஞ்சன கங்கா, ஜஸ்டிஸ் சக்கரவர்த்தி, மரோசரித்ரா உள்ளிட்ட எத்தனையோ சினிமாக்களில் நடித்த பிரதாப் போத்தனை இந்த பார்ட்டிக்கு அழைக்கவில்லை. அதனால் அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் தன் பேஸைக் காட்டி, தன் வருத்தத்தை வெளியிட்டார்.
“நான் 80ஸ் ரியூனியனுக்கு அருகதையற்றவன் போலும். ஒரு வேளை நான் நல்ல நடிகனோ அல்லது இயக்குனரோ இல்லை போலும். அதனால்தான் சிரஞ்சீவி என்னை அழைக்கவில்லை. எனக்கு மிக வருத்தமாக உள்ளது. என்ன செய்வது? என் சினிமாக்கள் சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது.
ஆனால் வாழ்க்கையில் அப்படியே கடந்து செல்ல வேண்டியதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரீயூனியன் பார்ட்டியில் இரவு முழுவதும் நன்கு என்ஜாய் செய்தோம் என்கிறார் பாலிவுட் நடிகை பூனம் தில்லான்.

அவர் தெலுங்கில் செய்தது ஒரே ஒரு படம்தான். ஸ்ரியா நடித்த ‘இஷ்டம்’ படத்தில் ஹீரோவின் தாய் பாத்திரத்தில் நடித்தார் பூனம். ஆனால் அவர் கூட இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். “இரவு முழுவதும் எத்தனையோ பேசினோம். அந்தாக்ஷரி கூட விளையாடினோம். காலை 6 மணிக்கு சிரஞ்சீவி வீட்டில் பிரேக்ஃபாஸ்ட் செய்துவிட்டு பின் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினோம்” என்று தெரிவித்தார்.
இப்படியாவது தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
அதுசரி….! இந்த ரியூனியன் என்றால் என்ன?

80களின் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் ஒவ்வொரு வருடமும் யாரோ ஒருவர் இல்லத்தில் சந்தித்து கொண்டாடுவது வழக்கம். எந்த நிற உடை அணிவது என்று முன்பே பேசி வைத்துக் கொள்வார்கள் . இந்த முறை ஸ்டார்கள் எல்லாம் கோல்டு, பிளாக் காம்பினேஷனில் அலங்கரித்துக் கொண்டு வந்தார்கள்.
2018இல் சென்னை தி நகரில் ஒரு தனியார் ரெசிடென்சியில் 22 நட்சத்திரங்கள் ரியூனியன் பார்ட்டியில் பங்கேற்றார்கள். அப்போது அவர்கள் டெனிம்ஸ் அண்ட் டைமண்ட் அலங்காரத்தில் வந்தார்கள்.




