தமிழகத்துக்கு மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
kovalambeach modi7 - 2026

தமிழகத்துக்கு மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒதுக்கீடு செய்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மருத்துவத்துறையில் மணிமகுடமாய் விளங்கும் தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளை கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் தலா ரூ.325 கோடியில் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் தமிழகத்திலுள்ள திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்த மருத்துவக் கல்லூரிகள் தலா ரூ.395 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

medical college list - 2026

ஒரே நேரத்தில் ஆறு மருத்துவக் கல்லூரிகள், ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப் படுவது இதுவே முதல்முறை !

இந்நிலையில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.

தமிழகத்திலுள்ள திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன. இந்த 3 மருத்துவ கல்லூரிகளும், தலா ரூ.325 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. மத்திய சுகாதார துறை அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.