வாழைத் தோப்பில் புகுந்து கவிழ்ந்த அரசு பேருந்து!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
bus 3 - 2026

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அரசு பேருந்து கருங்குளம் என்ற இடத்தின் அருகே சென்றப்போது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வாழை தோப்புக்குள் விழுந்து கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகள் பலரும் காயமடைந்தனர். இதனிடையே விபத்தின் போது பயணிகள் அலறல் சத்தம் கேட்டு விவசாய தோட்டத்தில் பணியில் இருந்த மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.

பின்னர் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டது.

இதனிடையே அரசு பேருந்து கவிழ்ந்து விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.