
சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா தனது வருங்கால கணவர் ராகவ்-வுடன் கடற்கரை மணலில் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
நக்ஷத்ரா நாகேஷ் 1992 செப்டம்பர் 11 ஆம் தேதி நாகேஷ் மற்றும் நளினி ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பயின்ற அவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷனில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, நம்பியார் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். வாணி ராணி சீரியல் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர்.
பள்ளிக் காலத்து தோழரான ராகவ் என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் நக்ஷத்ரா. ‘வணிகன்’ என்ற அந்தப் படத்தின் கதாநாயகனாக ஆனந்த் நாக் நடிக்கிறார். வி.பி.டேனியல் இந்த வணிகன் படத்தை இயக்குகிறார். சார்லி, புட் சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.