
BBC வேல்ஸ் தொலைக்காட்சியில் பெண் ஒருவர் நேரலையில் பேட்டி அளித்து கொண்டிருந்த போது, அவரின் பின்புறம் இருந்த செக்ஸ் பொம்மை குறித்து, நெட்டிசன்கள் வெளியிட்டுல கருத்து தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
BBC Wales தொலைக்காட்சியின் Live நேர்க்காணலில் விருந்தினரின் பின்புறத்தில் இருந்த செக்ஸ் டாய் (sex toy) பொம்மை பார்வையாளர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது. உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுள் ஒன்றான BBC Wales தொலைக்காட்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை நேரலை நேர்க்காணல் இடம் பெற்றது.
கொரோனா வைரஸால் (corona pandemic) உலகம் முழுவதும் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக இந்த நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விட்டி ஆமோஸ் (Yvette Amos) என்ற பெண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கங்களை கொடுத்தார்.
ஆன்லைன் வழியாக நடைபெற்ற இந்த நேரலை நேர்க்காணலில் பங்கேற்ற விட்டி ஆமோஸின் பின்புறத்தில் புத்தக அலமாரி ஒன்று இருக்கிறது. அதில், அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவே ஆணுறுப்பு (plastic penis) பாலியல் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மை நேரலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தெரிந்ததால், பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் டிவிட்டர் (Twitter) உள்ளிட்ட சமூகவலைதளங்களில் (Social Media) வேகமாக பரவி வருகிறது. உலகின் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் BBC-யில் இடம்பெறும் நிகழ்ச்சியில், இதுபோன்ற ஆபாச பொருட்கள் இருக்குமாறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பலாமா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு, அது ஒரு கலைப் பொருள் தான் எனவும், சிலர் அது செக்ஸ் பொம்மை தான் எனவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அந்த பொம்மையை அவர் வேண்டுமென்றே வைத்திருக்கலாம் எனவும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார் எனவும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Perhaps the greatest guest background on the BBC Wales news tonight. Always check your shelves before going on air. pic.twitter.com/RK6GCiFuHk
— Grant Tucker (@GrantTucker) January 26, 2021