தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

சற்றுமுன் தமிழகம்
bus operation - 2026

அரசு பஸ் ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யக் கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பணியில் இருக்கக் கூடிய அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதமான உதவிகளையும் செய்யக் கூடாது. அரசியல் கட்சிகளுடன் வாக்கு சேகரிக்க செல்லக் கூடாது.

தங்களது வாகனம், வீடுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை பொறிக்க அனுமதிக்கக் கூடாது, வாக்குச்சாவடி முகவர்களாக பணியில் ஈடுபடக் கூடாது. தேர்தல் பணியில் இருக்கக் கூடிய ஊழியர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்.

எனவே, தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் தேர்தல் விதி எண் 134 இன் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.