நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது. லஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சட்ட மசோதா கடந்த 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாக்கினார். ஆனால், இதுநாள் வரையில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.
இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வராததை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.



