உண்மையான உணர்வுள்ளவர்களா இருந்தா… நாலு பேரும் இதைச் செய்யுங்க..!

Published:

four bjp members
four bjp members

தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரின் கவனத்திற்கு…

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ராமராஜ்ய ரதயாத்திரை வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி தமிமுன் அன்சாரி என்கிற இஸ்லாமிய MLA ஒருவன் தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு ரகளை செய்தான். அதை நாடே வேடிக்கை பார்த்தது…

ansari
ansari

ராமராஜ்ய யாத்திரை வெற்றிகரமாக தமிழகத்தை வலம் வந்தால் இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வும், ஒற்றுமை உணர்வும் மேலோங்கத் தொடங்கிவிடும் அதை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும்.

அப்படி செய்துவிட்டால் இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடந்தே தீரும். இஸ்லாமியர்களின் வலிமை அப்படி என அனைத்து தரப்பு மக்களையும் உளவியல் ரீதியாக எண்ண வைக்க வேண்டும். அதன் மூலம் இந்துக்களை பலவீனப்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாக இஸ்லாமியர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அனைத்து கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்கிற எழுதப்படாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கம் …
சட்டப்பேரவையில் அன்று தமிமுன் அன்சாரி செய்த அமளிக்கு திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன…

thamimunansari
thamimunansari

இன்று திமுக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்திருக்கிறது. விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவோ, ஊர்வலம் செல்லவோ, விசர்ஜனம் செய்யவோ கூடாது என…
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட திமுக அரசின் இந்து விரோத போக்குக்கு எதிரப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இதுவரை இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுக்காதது வருத்தமளிக்கிறது.
இந்நேரம் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் உத்வேகம் பிறக்கும் அளவிற்கு சட்டமன்றத்தில் மிகப்பெரிய கவன ஈர்ப்பு போராட்டத்தை தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திருக்க வேண்டும்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அதை செய்யாமல் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது.
உடனடியாக தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்க வேண்டும்.
அதுவே கோடிக்கணக்கான இந்துக்களின் எதிர்பார்ப்பு.
தமிமுன் அன்சாரி என்கிற ஒரே ஒரு முஸ்லிம் MLA ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் மிகப்பெரிய அமளியில் ஈடுபட முடிந்தது சாத்தியம் என்றால்…
நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுகிற உரிமையை மீட்டெடுக்க இந்துக்களுக்காக சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்க முடியாதா?

முடியும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் மனது வைத்தால்…
பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று?

  • குரு கிருஷ்ணா

Related articles

Recent articles

spot_img