தேர்தலுக்காக 5 நாள் லீவாம்..! மதுப்ரியர்கள் அதிர்ச்சி!

Published:

tasmak
tasmak

சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் 5 நாட்கள் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபானக் கடைகள் மூடப்படுவது வழக்கமான ஒன்று தான். எப்போதும் வாக்குப்பதிவு அன்று, அதற்கு முதல்நாள் கடைகள் மூடப்படும். ஆனால் இந்த முறை புதுச்சேரியில் 5 நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வெளியிட்டிருக்கும் உத்தரவில், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என மொத்தம் 1,54,847 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.29.65 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

tamilisai soundarrajan - 2026

மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அங்கன்வாடிகளுக்கு தேவையான சாதனங்கள்வாங்க ரூ .24.35 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட் டுள்ளது என்று தமிழிசை கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையொட்டி மே 2 மற்றும் மே 3ஆம் தேதி மாலை 4 மணி வரையிலும் மதுக் கடைகள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள், மது விற்பனையுடன் கூடி ரெஸ்ட்டாரண்ட் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img