குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட மாட்டேன்ங்கறாங்களா? இப்படி கொடுங்க!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Beetroot sweet chapati - 2026

பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
பீட்ரூட் – 2 (சிறியது)
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணெய் (அ) நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் (அ) நெய் – தேவையான அளவு

செய்முறை
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் விட்டு துருவிய பீட்ரூட், சர்க்கரை மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.

சர்க்கரை இளகியதும் தண்ணீர் விட்டு நன்கு சுருள வதங்கி வரும். வதங்கியதும் இறக்கி வைத்து ஆறவிடவும்.

ஆறியதும் அதனுடன் கோதுமை மாவு சேர்த்து பிசையவும். (பிசைவதற்கு ஈரப்பதம் போதவில்லையெனில் சிறிது வெந்நீர் தெளித்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்).

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தொட்டுக் கொண்டு மெல்லிய சப்பாத்தியாக போட்டுக் கொள்ளவும்.

தோசைக் கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக சிவந்ததும் எடுக்கவும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கலர் ஃபுல்லான பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி ரெடி.
சர்க்கரை சேர்ப்பதால் மாவைப் பிசைந்த பிறகு அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.