
விடுதலைப் புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், எனவே, சோனியா காந்திக்கான பாதுகாப்பு ஏற்பாட்டை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து திமுக., வின் எம்.பி., டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கடும் கூட்டலிட்டுப் பேசினார். தொடர்ந்து திமுக., அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில், திமுக.,வின் நிலைப்பாடு கேள்விக்கு உள்ளானது. திமுக., இரட்டை வேடம் போடுவதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழர் விடுதலை இயக்கத்தின் பழ.நெருமாறன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக.,வின் அதிகாரபூர்வ இதழான முரசொலியில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
விடுதலைப்புலிகள் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியதை திரித்து பேசுகின்றனர். விடுதலைப்புலிகள் விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து தான் டி.ஆர்.பாலு பேசியிருந்தார்… என்று குறிப்பிட்டு, சீமான், பழ.நெடுமாறன் உள்ளிட்டோரின் விமர்சனத்திற்கு முரசொலி பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி விடுதலைப் புலிகளுக்கான தடையை மத்திய அரசு 5 ஆண்டுகள் நீட்டித்ததாக பேசினார். மறுபுறம் அச்சுறுத்தல் இல்லை எனக்கூறி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கான பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது எனவும் டி.ஆர்.பாலு பேசினார்- இதற்கு முரசொலி நாளேட்டில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.



