ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 10ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து கங்கனா ரனாவத் கூறிய போது, இந்தப் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நான் தமிழ் பேச கற்றுக் கொண்டு வருகிறேன்! மேலும் அரசியல்வாதிகளைப் போல வணக்கம் சொல்வதையும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று கூறினார்.
அடுத்த வருடம் அதாவது 2020 ஜூன் 26 ஆம் தேதி வெளியாக திட்டமிடப் பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப் படுகிறது.
இது குறித்து கங்கனா டீம் டிவிட்டர் பக்கத்தில் படத்தையும் செய்தியையும் பகிர்ந்து கொண்டுள்ளது .
இவரை நமக்குத் தெரியும். ஆனால் இவர்பின்னுள்ள பல நமக்குத் தெரியாது என்ற குறிப்புடன் இந்தப் படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.