
தமிழகம் முழுவதும் ஜனவரி 21 முதல் கள் இறக்கும் அறப்போராட்டம் நடைபெறும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது;
மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களுக்கு மறைமுகத் தோதல் என்பது தவிர்க்கப்பட வேண்டும். நேரடி வாக்கெடுப்பு முறை தான் சிறந்தது.
மறைமுகத் தோதல் குதிரை பேரத்துக்கே வழிவகுக்கும்.
மேலும், உள்ளாட்சி தோதலில், அரசியல் கட்சி சின்னங்களை பயன்படுத்தாமல் சுயேச்சைக்குரிய சின்னங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவை தோதல் ஆணையம் வழங்க வேண்டும்.
ரஜினி, கமல் போன்றோர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு வர விரும்பினாலும், கள் ஒரு போதைப் பொருள் தான் என இருவரும் நிரூபித்து விட்டு அதன்பின் அரசியலுக்கு வரட்டும்.
அவ்வாறு கள் போதையானது எனது நிரூபித்தால், அவா்களுக்கு மக்கள் செல்வாக்கு பெருகும்.
ஆனால், இருவராலும் கள் ஒரு போதைப் பொருள் என்பதை நிரூபிக்க முடியாது.
ஜல்லிக்கட்டுக்கு நடைபெற்ற போராட்டம் போல், கள்ளுக்காகவும் போராட்டம் நடைபெறும்.
2020 ஜனவரி 21 முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.



