ஏப்ரல் 22, 2021, 4:17 மணி வியாழக்கிழமை
More

  இந்த அறிகுறிகள் உங்களுக்கு அறிவுறுத்துவது என்ன?

  pain - 1

  நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம்

  சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும்.

  நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.

  உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.

  வீக்கங்கள் முதலில் முகத்தில் ஆரம்பித்து கண் இமைகளைத் தொட்டு விட்டு முக்கியமாக காலை வேளையில் மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.

  சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

  சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.

  மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.

  ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.

  பசியின்மை, அசாதாரண வாய் ருசி, மற்றும் மிகக் குறைவாக உணவில் நாட்டம் போன்றவை இந்த சிக்கலுக்கான பொதுவான அறிகுறிகளாகும். இது மேலும் பழுதாகும் பொழுது, உடலுக்கு தேவையற்ற விஷப் பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகும் பொழுது, சம்பந்தபபட்ட நோயாளிக்கு வாந்தி மற்றும் அடிக்கடி விக்கல்கள் வரும். சிலருக்கு அடிக்கடி குமட்டல் ஏற்படும். அதிகப்படியான காய்ச்சலிளிருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.

  சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

  மூச்சுத்திணறல் என்பது நீங்கள் தூங்கும் போது சுவாசத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைநிறுத்தங்களை ஏற்படுத்தும் ஒரு கோளாறு. இந்த இடைநிறுத்தங்கள் ஓரிரு வினாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை நீடிக்கும். ஒவ்வொரு இடைநிறுத்தத்திற்கும் பிறகு, சாதாரண சுவாசம் உரத்த குறட்டையுடன் திரும்பும். உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவும்.

  பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

  kidney 1 - 2

  கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும். வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து கொடுத்தல் – இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்பொழுது வரக் கூடிய அறிகுறிகள்

  சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.

  சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.

  உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, நச்சுகள் சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடும். நச்சுகளின் அளவு அதிகரிப்பது நீங்கள் தூங்குவதைக் கடினமாக்குகிறது. அதனால் சிறுநீரக செயல்பாடு குறைவாக இருக்கும்போது நிம்மதியான தூக்கம் வருவது கடினம்.

  சிறுநீரகங்கள் நச்சுகளை சரியாக வடிகட்டாதபோது, அவை இரத்தத்தில் தங்கிவிடும். இது தினசரி நீங்கள் தூங்கும்போது சிக்கலை உருவாக்குகிறது

  சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். அதனால் சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும்.

  வலிப்பு நோயுடன், உடல் மற்றும்
  தலையில் கட்டுப்படுத்த முடியாத வகையில் வலிகள் இருந்தால் அதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாகும்

  மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தோன்றினால், உடனே சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »