ஏமாற்றி 5 வதாய் திருமணம் முடித்த முதியவர்! பாலுறவுக்கு அழைத்து கழுத்தை அறுத்த மனைவி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
murder-1
murder-1

தன்னை ஐந்தாவதாக ஏமாற்றி திருமணம் செய்த வயதான கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஜரிபட்காவில் வசித்து வந்தவர் லக்ஷ்மன் ராம்லால் மாலிக் (65). இவருக்கும் சுவாதி என்ற 28 வயது பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில் லக்ஷ்மன் கோபித்து கொண்டு தான் வேலை செய்யும் அலுவலக நண்பரின் வீட்டிற்கு சென்று அங்கையே தங்கியுள்ளார்.

இதற்கிடையில் சுவாதிக்கு லக்ஷ்மன் ஏற்கனவே நான்குமுறை திருமணம் செய்து அனைவருடனும் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுவாதி லக்ஷ்மன் இருக்கும் இடத்தை விசாரித்து தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை லக்ஷ்மணை பார்க்க சென்ற சுவாதி அவரை உடலுறவு கொள்வது போல் அழைத்து நாற்காலியில் கட்டிப்போட்டு உடலுறவும் வைத்துள்ளார்.

பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் சுவாதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.