9,10,11 மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
school
school

9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி என அறிவித்தார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று ஒரு சுற்றறிக்கையில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.