வெயில் அடிக்குது வற்றல் போடலாமா.. மைதா ஜவ்வரிசி வடாம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Maitha Jawwarisi Vadam - 2026

மைதா – ஜவ்வரிசி வடாம்
தேவையானவை:
ஜவ்வரிசி – ஒரு கப், மைதா – கால் கப்,
பச்சை மிளகாய் – 4,
மஞ்சள்தூள், சீரகம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சை பழம் – ஒன்று, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் ஒரு கப் நீர் விட்டு, ஜவ்வரிசியை சேர்த்து குழைய வேகவிடவும். அடுத்த நாள், மைதாவை நீரில் கரைத்து இதனுடன் கலந்துகொள்ளவும். பிறகு, பச்சை மிளகாய், உப்பு, பெருங் காயத்தூள் ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நீரைக் கொதிக்கவிட்டு, இந்தக் கலவையை சேர்த்துக் கிளறி… மஞ்சள்தூள், சீரகம், எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.

பிறகு, கரண்டியால் மாவை எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும். மறுநாள், அடுத்த பக்கம் திருப்பி போட்டு, காய்ந்ததும் எடுத்து வைத்து, தேவைப்படும் போது, எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.