
சமீபத்திய நம் சமூக வலைத்தள பக்கங்களில் அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன தயாரிப்பு F35B ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட போர் விமானம் ஒன்றை நம் இந்திய பொறியாளர்களால் உருவாக்க ரேடார் சாதனங்களால் முடக்கப்பட்டதாக புருடா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இதில் உள்ள நிஜம் என்ன…..?!?!
முதலில் விஷயத்தை கவனிப்போம்.
இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் எனப் பெயரிடப்பட்ட கப்பல் தொகுதி ஒன்று வருடாந்திர கடற் பயிற்சிக்காக
பயணம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பயண திட்டத்தில் நம் இந்திய கடற் படையுடனான போர் பயிற்சியும் அடங்கும். அந்த வகையில் அரபிக் கடலில் கேரளக் கடற்கரையில் இருந்து 480 நாட்டிகல் தூரத்தில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முடிந்து அது சிங்கப்பூர் நோக்கி பயணப்பட இருந்த சமயத்தில் தான் இந்த F35B ஹாங்கரில் மாற்றி விட தீர்மானித்த சமயத்தில்…. மேல் நோக்கி பறக்க உயர்த்தி இருக்கிறார்கள்.
அப்போது தான் ஒரு விஷயத்தை அவதானித்து இருக்கிறார்கள். அது அந்த ஸ்டெல்த் மால்பங்ஷன் ஆகி இருப்பதை உணர்ந்து இருக்கிறார்கள். இது அந்த விமானத்தின் ஹைட்ராலிக் சிஸ்டத்தை முடக்கிவிடகூடியது என்பதால் நம் இந்திய கடற்படைக்கு தகவல் அனுப்பி உதவி கோர….. இவர்கள்.. அதாவது நம் இந்திய தரப்பில் இருந்து, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் தரை இறங்க இடம் ஒதுக்கி கொடுத்து உதவி செய்திருக்கிறார்கள்.
ஹைட்ராலிக் சிஸ்டம்ஸ் விமானம் தரையிறங்கும் சமயத்தில் சக்கரங்களை விடுவிக்க கூடியது. ஆனால் ஸ்டெல்த் பண்புகள் சுவிட்ச் ஆப் ஆனதால் மால் பங்க்ஷனால் இந்த விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதே நிலையில் விமானந்தாங்கி கப்பல் மேல் தளத்தில் தரை இறங்கினால் பலத்த சேதத்தை உண்டுபண்ணும் வாய்ப்பு ஏற்படும் அச்சம் காரணமாக நிலத்தில் தரையிறக்க முடிவு செய்து உதவி கோரப் பட்டது.
எதிர்பார்த்தது போலவே விமான தரை இறங்கிய சமயத்தில் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை…. ஆனால் டேப் ஆஃப் ஆக ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகள் இடம் கொடுக்கவில்லை. விமானம் இஞ்சின் இயங்கவேயில்லை என்கிறார்கள்.
இந்த ரக விமானங்களில் ஒற்றை இஞ்சினால் சக்தி கொடுக்கப்பட்ட விமான ரகம் ஆகும்.பார்ட் அண்ட் விட்னி F135 நிறுவன தயாரிப்பு இந்த இஞ்சின். அது ஆரம்ப கால பிரிட்டிஷ் நிறுவனம்.
அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன தயாரிப்பு இந்த F 35 என்ற போதிலும் இதில் மூன்று வெவ்வேறான ரகங்கள்….. வெவ்வேறான பயன்பாடுகளுக்கு என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விமானங்கள் ஆகும்.
அமெரிக்க வரலாற்றில் இது மாத்திரமே சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி டாலர்களை விழுங்கிய திட்டமிடல் என மதிப்பாய்வு செய்திருக்கிறார்கள்.
ஆன போதிலும் முறையாக முழுமையான திட்ட வெற்றி இது என்றும் சொல்லிவிட முடியாது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில் ……
மேற்படி திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பிரச்சினை போல் இதுவரையில் 47 முறை இந்த ரக விமானங்களில் ஏற்பட்டு இருக்கிறது. இதுவரையில் இந்த F 35 ரக விமானங்களில் மாத்திரமே சுமார் 91 முறை பிரச்சினை வந்திருப்பதாக பதிவு செய்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆறு முறை விபத்தில் சிக்கிய சம்பவங்களும் உண்டு. இரண்டு முறை முற்றிலும் நாசமாகி இருக்கிறது. எலான் மஸ்க் இந்த திட்டத்தையே தோல்வி என்று பேசி இருக்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் அமெரிக்கர்களை ஏமாற்றி வருகிறது என பொது வெளியில் வைத்து ஏகத்திற்கும் சீண்டி இருக்கிறார்.
இது எந்த ஒரு போரிலும் முழுமையாக பங்கு கொண்டதாகவோ சிறந்த விமான ரகமாக நிரூபித்து வெற்றி கண்டதில்லை என்கிறார் அவர்.
இதை வேறு நம் இந்தியாவின் தலையில் கட்டி விட பிரம்ம பிரயத்தனங்களை செய்து பார்த்தது அமெரிக்கா. மசியவில்லை நம்மவர்கள்.
அதுபோலவே இந்த விமானத்தை நம்மவர்கள் பிளாக்ஹவுட் செய்து பிடித்து இருக்கிறார்கள் என்பதும் பொய்யே.
ஏனெனில் இதை சீனர்கள் ஏற்கனவே 2017-18 காலக்கட்டத்தில் பிரதி செய்து….. படியெடுத்து…… சரியாக சொல்வதென்றால் நகல் எடுத்துவிட்டார்கள்…. அதில் நம்மவர்கள் கை வைக்க ஏதும் இல்லை.
அதேசமயம் நம் இந்திய பொறியியலாளர்கள் இதைக் காட்டிலும் மேம்பட்ட தொழில்நுட்ப பண்புகளை கொண்டவர்களாக உருமாறி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இப்படி சொல்லலாம்….. வானில் பறக்கும் விமானங்களின் எரிபொருளை கண்காணிக்கும் அளவில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள். இப்படி செய்வது உலக அளவில் நாம் மட்டுமே. இது ஒன்றே போதுமானது நாம் எவ்வளவு தூரம் தொழில்நுட்ப பண்புகளில் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம் என்பதற்கு.
அதை விடுத்து சிறுபிள்ளை விளையாட்டில் எல்லாம் நம்மவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. மேற்சொன்ன விவகாரம் அப்படினா ஒன்று .
கட்ட கடைசியில் ராணுவ சரக்கு போக்குவரத்து விமானத்தில் அதன் இறக்கைகளை பிரித்து ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிங்கப்பூர் நோக்கி அது சென்றது.
- ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்





