33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
beela rajesh 1
beela rajesh 1

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப் பட்டுள்ளார்.  

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை  எடுக்கப் பட்டுள்ளது. 

இதன்படி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்துக்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்., காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். 

anu george
anu george தென்காசி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக  அனு ஜார்ஜ்  ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

33 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், மாவட்டங்களும் விவரம் வருமாறு:

1. அரியலூர் – சரவண வேல்ராஜ்

2. பெரம்பலூர் – அனில் மேஷ்ராம்

3. கோயம்பத்தூர் – ஹர்மந்தர் சிங்

4. நீலகிரி – சுப்ரியா சாஹு

5. கடலூர் – கஹந்தீப் சிங் பேடி

6. தர்மபுரி – சந்தோஷ் பாபு

7. திண்டுக்கல் – மங்கத்ராம் ஷர்மா

8. ஈரோடு – காகர்லா உஷா

9. கன்னியா குமரி – ஜோதி நிர்மலா சாமி

10. கரூர்- விஜயகுமார்

11. திருச்சி – ரீத்தா ஹரீஷ் தாக்கர்

12. கிருஷ்ணகிரி – பீலா ராஜேஷ்

13. மதுரை – தர்மேந்திர பிரதாப் யாதவ்

14. புதுக்கோட்டை – ஷாம்பு கல்லோலிகர்

15. தஞ்சாவூர் – பிரதீப் யாதவ்

16. நாமக்கல் – தயானந்த் கட்டாரியா

17. சேலம் – நஸிம்முதன்

18. விருதுநகர் – மதுமதி

19. தூத்துக்குடி – குமார் ஜெயந்த்

20. நாகப்பட்டினம் — முனியநாதன்

21. ராமநாதபுரம் – சந்திர மோகன்

22. சிவகங்கை – மஹேஷ் காசிராஜன்

23. திருவாரூர் – மணிவாசன்

24. தேனி – கார்த்திக்

25. திருவண்ணாமலை – தீரஜ்குமார்

26. நெல்லை – அபூர்வா

27. திருப்பூர் – கோபால்

28. வேலூர் – ராஜேஷ் லக்கானி

29- விழுப்புரம் – முருகானந்தம்

30. கள்ளக்குறிச்சி – நாகராஜன்

31. தென்காசி – அனுஜார்ஜ்

32. திருப்பத்தூர் – ஜவஹர்

33. ராணிப்பேட்டை – லட்சுமி பிரியா

மேற்கண்ட உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.