டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினர்.
சந்திப்பின்போது,தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக ராகுலிடம் அவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இளங்கோவனை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
ராகுல் காந்தி வீட்டில் நடந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கோபிநாத், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்ததாக தெரிகிறது.



