கொரோனா: இரண்டாவது முறை வந்தால்.. அதிர்ச்சி தகவல்!

உலகம் சற்றுமுன்
corono

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் எந்த வகையான நோயில் இருந்தும் மீண்டு விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கொரோனா வைரஸ் அதனை பொய்யாக்கி விட்டதாக கூறப்படுகிறது.

அதாவது சீனாவில் முதல்முறை கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும், வைரஸ் காய்ச்சல் பரவியதாகவும் அதில் பெரும்பாலான மக்கள் உயிரிழந்து விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற உயிரிழப்புகள் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் நடந்துள்ளதாம்.

corono dead body

வெளிநாடுகளில் சீதோஷன நிலையால் மீண்டும் கொரோனா பரவி இருக்கலாம் என்று பலரும் நினைத்து வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் கொரோனாவில் இருந்து மீண்ட செவிலியர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் மீண்டும் கொரோனா பரவியுள்ளது தான் அதிர்ச்சிக்குரிய தகவல். இந்த நிலையில், இரண்டாம் முறை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவின் தன்மைகள் எதையுமே உறுதியாக கூற முடியாத இந்த சூழலில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் கொரோனா பரவாத தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போல இரண்டாவது முறையாக பாதிக்கும் நபர்களுக்கு அறிகுறி இல்லை என்றாலும், நீரிழிவு, இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட இணை நோய்கள் இருப்பவர்கள் உயிரிழக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.