இந்திய சீன மோதலில் இந்திய வீரர்கள் காணாமல் போகவில்லை: இந்திய இராணுவம்!

இந்தியா சற்றுமுன்
miltry

இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதல்களில் இந்திய ராணுவம் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவம் விளக்களித்துள்ளது.

இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று முன் தினம் வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அன்று நடந்த மோதலில் இரவு என்பதால் சில ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியானதை அடுத்து தற்போது இராணுவ தரப்பிலிருந்து சீனா உடனான மோதலுக்கு பின் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவம் விளக்களித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.