
சோதனையாகும் சோதனைச்சாவடிகள்… வாழ்க்கையே வெறுத்துப் போகும் சென்னை மக்கள்
ஐயா கால்ல வுழறேங்க என்று கெஞ்சினாலும் கதறினாலும் கொஞ்சம்கூட கருணை காட்டாமல் போலீசார் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோரை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் தங்கள் சொந்த ஊர்களுக்கு டூவீலரில் ஆவது சென்று விடலாம் என்று கனவு கண்டு சாலைகளில் காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது
இதனால், சென்னை பரனூர் சுங்கச்சாவடிக்கு முன் 2 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையை இன்றைய செய்திகள் படம் பிடித்து காட்டுகின்றன!
கொரோனா நெருக்கடி காரணமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று விடலாம் என்று திரும்பும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொது முடக்கம் காரணமாக, இந்த நேரத்தில் வேலை, வருமானம் எதுவும் இல்லாத சூழலில், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகிவிட்டனர் சென்னையில் குடியேறியவர்கள்.
மதுரை நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டும் அல்லாது கோவை ஈரோடு சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் சென்னையில் குடியேறி அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் மார்ச் மத்தியிலிருந்து ஊரடங்கு பொதுமக்கள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து வேலை வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது என்று அதிக அளவில் வெளியேறி வருகின்றனர் காரணம் நாளை முதல் அடுத்த 12 நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பொதுமக்கள் அமல்படுத்தப்பட உள்ளது
இந்த நிலையில் சென்னையில் இருப்பதை காட்டிலும் சொந்த ஊர்களுக்கு செல்லலாமே என்ற எண்ணத்தில் பலரும் சென்னையில் இருந்து வெளியேறி உள்ளனர் ஆனால் அவர்களை செங்கல்பட்டு சுங்கச்சாவடி தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் சென்னைக்கே அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்
செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் காணும் காட்சி கண்களை குளமாக்குவது. இ-பாஸ் இல்லாமல் தென் மாவட்டங்களுக்கு வருவோர் சோதனைச்சாவடியில் திருப்பி அனுப்பப்படுவதால் குழந்தைகள், முதியவர்களுடன் சாலைகளில் தவிக்கும் அவலமான நிலை நிலவுகிறது. மேலும், சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகாரிகள் காலில் விழும் பரிதாபமும் அங்கே காண முடிகிறது.